(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ தேரோட்ட திருவிழா இன்று (17) செவ்வாக்கிழமை காலை பக்தர்கள் வடம் பிடிக்க பிரதம குரு சிவஸ்ரீ கணேசா லோகநாத குருக்கள் தலைமையில் தேரோட்டம் நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவானது கடந்த வியாழக்கிழமை (12) ஆரம்பமாகி இறுதி நாளாகிய இன்று அலங்கார தேரோட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. சிவனேஸ்வரர் ஆலய தேரோட்டத்தில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சிவனேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்த உற்சவமானது நாளை புதன்கிழமை (18) சுமார் 6.30 காலை வேளையில் இந்துமா சமுத்திர ஆரையம்பதி கடற்கரையில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










