கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதால் இன்று எமக்கான உபவேந்தர் யார்? என கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
கேள்வியெழுப்பியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா அவர்களின் மூன்று வருட பதவிக்காலம் நேற்றுடன்(12.02.2015) நிறைவடைந்துள்ளதாகவும். அதனால் தங்களது நிர்வாக நடவடிக்கைகளுக்கு இன்று யார் உபவேந்தர்? என ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேள்வி எழுப்பியதுடன் இது குறித்து பதில் வழங்குமாறும் கோரியுள்ளனர்.
இன்நிலையில் இது குறித்து இன்று பிற்பகலுக்குள் பதில் வழங்குவதாக பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் அடுத்த உபவேந்தர் யார்? தற்போதைய உபவேந்தரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் சற்று நேரத்தில் எமது இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.


.jpg)










