மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் கடந்த வருடம் புலமைப்பரிசில் சித்தியடைந்த 91 மாணவர்களுக்கு பாராட்டும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு இன்று குறிஞ்சாமுனையில் இடம்பெற்றது .
யாழ்ப்பாணம் இளந்தளிர் கல்விச் சமூக அறவாரியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயம் நடாத்திய பரிசளிப்பு நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக மாணவர்களையும் அதிதிகளையும் வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து மாலையணிவித்து குறிஞ்சாமுனை அ.த.க பாடசாலையின் கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டது. மேலும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்(அபிவிருத்தி) எஸ்.மகேந்திரகுமார் அவர்களது தலைமையில் இடம்பெற்றதுடன் அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் அவர்களுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆலோசகர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருந்து பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டும் எனவும் மாணவர்களின் கல்வியில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என கூறியதுடன் இளந்தளிர் கல்விச் சமூக அறவாரியத்திற்கு வலயத்தின் சார்பாக நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் நன்றியுரையாற்றிய பிரதிக் கலவிப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார் அவர்கள் இளந்தளிர் கல்விச் சமூக அறவாரியத்திற்கு மனப்பூர்வமான கூறியதுடன் இவ் பின் தங்கிய மாணவர்களுக்கு இப்படியான உதவிகள் தொடரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
























