கரு ஜயசூரிய திருகோணமலை விஜயம்

கிழக்கு மாகாணத்தின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று 23.02.2015 காலை 9.30 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுநிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை, ஜனனாயக ஆட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய,  காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் M.K.D.S குனவர்தன, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனேண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உற்பட கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்


இத்ன்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தினுள் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட இருக்கின்ற செயல்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது உரைஆற்றிய அமைச்சர் அவர்கள்,

நாங்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டை பாரமெடுத்தோம், அண்று மாதத்தின் இறுதிக்கிழமைகளில் பணமிண்றி மிகவும் கஷ்டப்படுகின்ற நிலையில் கூட குடும்பங்கள் வாழாந்துகொண்டிருந்தன ஆனால் இன்று அத்தியாவசியமான பொருட்களின் விலைகளைக் குறைத்தோம், மாத வருமாணத்தை அதிகரித்தோம் இன்னும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, அவற்றைச்செயற்படுத்துவதற்காக நாங்கள்  இன மத பேதமிண்றி ஒற்றுமையுடன் செயற்பர்ட்டு இலங்கை நாட்டை முன்னேற்ற ஒன்று படுவோம் என குறிப்பிட்டார்.

அதன்பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன்போது கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் அவர்களால் சம்பூர் மக்கள் தொடர்பான பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள் இப்பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் குளுக்களுக்கிடையில் ஆராய்ந்து வருவதாகவும் இதற்கான முடிவு கூடிய விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.