‘வெறும் வீதிகளும் பாலங்களும் கட்டடங்களும் பௌதீகரீதியான அபிவிருத்தியாக இருக்கின்றதேயொழிய மக்கள் வாழ்விலே அபிவிருத்தியை உண்டு பண்ணவில்லை, அவர்களது மனங்களிலே மாற்றத்தை உண்டுபண்ணவில்லை. ஏழைகள் ஏழைகளாகவேயிருக்கின்றனர். இந்நிலை மாறவேண்டுமானால் அயலாரில் தங்கியிருப்பதை விட்டு உங்களை நீங்கள் நம்புங்கள் உங்கள் கைகளை நம்புங்கள். உழைக்கும் கைகளாக அவற்றை மாற்றுங்கள்’
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சின்னவத்தை செஞ்சிலுவை அலகின் 2015ம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டத்திலே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா இவ்வாறு பேசினார்.
அவர்தொடர்ந்து பேசுகையில், செஞ்சிலுவைத் தொண்டர்கள் அனர்த்த காலங்களிலே மேற்கொள்ளுகின்ற அவசர நிவாரணப்பணிகயோடு நின்றுவிடாமல் சாதாரண காலங்களிலே மக்களிடையே விழ்ப்புணர்வை ஏற்படுத்தி மங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த் பாடுபடல் வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்திலே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவின் தலைவரும் மாவட்டக்கிளையின் பொருளாளருமான வடிவேல் சக்கிவேல், சின்னவத்தை செஞ்சிலுவை உறுப்பினர்கள், ஊர்ப்பெரியவர்கள் மற்றும் செஞ்சிலுவை உத்தியோகத்தர் எஸ். நிவேசன் முதலானோரும் கலந்து கொண்டிருந்தனர்.












