இம்முறை பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஒரு கிலோ நாட்டரசி நெல் 40 ரூபாவாகவும், சம்பா மற்றும் கீரி சம்பா நெல் 50 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறியுள்ளார்.
இரண்டு லட்சம் மொட்ரிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது
எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் அனைத்து நெல் களஞ்சியசாலைகளிலும் நெல் கொள்ளவனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது
நெல் கொள்வனவு நடவடிக்கையினை அமைச்சு நேரடியாக கண்காணிக்கும் எனவும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் கூறியுள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













