மு.கா.வுடன் இணைந்து ஐ.தே.க. ஒருபோதும் ஆட்சி அமைக்காது தேசிய அமைப்பாளர் தயாகமகே திட்டவட்டம்

(பேரின்பராஜா சபேஷ்) ஐக்­கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் சேர்ந்து ஒருபோதும் ஆட்­சி­ய­மைக்­காது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கப்­பட்டால் மாத்­தி­ரமே இது சாத்­தி­ய­மாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான தயா­க­மகே  தெரி­வித்தார்.
 கிழக்கு மாகாண சபையில் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் 11 பேரும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என்­பதில் உடன்­பாடு கண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வமே ஒரு இறுதி தீர்­மா­னத்தை மேற்­கொள்­ளா­தி­ருக்­கி­றது.
 
கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்லிம் மக்­க­ளுக்கு செய்­யாத சேவை­களை எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து நானே செய்­தி­ருக்­கிறேன். முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக போரா­டி­யி­ருக்­கிறேன்.
 
தமிழ் மக்­க­ளி­னதும் முஸ்லிம் மக்­க­ளி­னதும் காணிகள் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சினால் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட போது முஸ்லிம் காங்­கிரஸ் மௌன­மாக இருந்­தது. திரு­கோ­ண­மலை கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் தகர்க்­கப்­பட்ட போது அதற்கு எதி­ராக நாமே குரல் கொடுத்தோம்.
 
அளுத்­கம பேரு­வளை சம்­ப­வங்­களின் போது ஐக்­கிய தேசிய கட்­சியே மிக தீவி­ர­மாக குரல் கொடுத்­தது. எதிர்த்­தது. அன்­றைய அர­சுடன் ஒட்­டி­யி­ருந்த முஸ்லிம் காங்­கிரஸ் முன்­னின்று எதிர்க்க வேண்­டிய பணி­களை நாமே செய்­தி­ருக்­கிறோம். முஸ்­லிம்கள் நூற்றுக்கு நூறு வீதம் ஐ.தே.கட்சியையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தார்கள். எனவே முதலமைச்சர் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் என்றார்.