(சித்தாண்டி நித்தி) கல்குடா கல்வி வலய வாகரை கேட்டக்கல்வி பிரிவிலுள்ள பால்சேனை பாடசாலை மைதானம் எப்போது புனரமைத்து தரப்படும் என பாடசாலையின் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான நிரந்தர விளையாட்டு மைதானம் இருந்தபோதும் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் இருந்து புனரமைக்கப்படாமை இருப்பதாக பாடசாலை மாணவர்கள் பெரும் கவலை தொவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கவேண்டும் அப்போது தான் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் உடல் உள நல ஆரோக்கியம் வளர்ச்சியடைவதுடன் பல்வேறுபட்ட குணநல பண்புகளுடன் அம்மாணவர்கள் மத்தியில் காணப்படும். இதன் மூலம் நல்தோர் எதிர்கால திடகாத்திரமான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என பல்வேறுபட்ட அதிகாரிகளின் மேடைப்பேச்சு ஊடாக நாம் அவதானிக்கின்றோம். அவ்வாறான மாணவர்கள் சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் இவ்வாறன மைதானங்களும் புனரமைக்கப்படவேண்டுமல்லவா?
யுத்தத்தின் முன்னரும் யுத்தத்தின் பின்னுமுள்ள காலப்பகுதியிலிருந்து இப்பாடசாலை மைதானத்தில் எவ்வித முன்னேற்றம் மற்றும் புனரமைப்பும் நடைபெறவில்லை எனலாம்.
நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் அதன் கட்டுமான வசதிகள் புனரமைக்கப்பட்டு வரும் காலப்பகுதியில் இவ்வாறன முக்கிய வேலைகள் இன்னும் கண்டும் காணாததுபோல்தான் இருக்கின்றது.
2015ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் அனைத்தும் குன்றும் குழியும், புல்லும் புதருமாகவும், சுரியும் சேறுமாகவுள்ள மைதான பார்வைக்கு இல்லாத இடத்தில் நடைபெற்றதை வருகைதந்த அதிகாரிகள் அறிந்திருப்பார்கள்.
மாணவர்களினால் உரிய விளையாட்டுக்களை விளையாட முடியாதுள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்பை இவ் மைதான அமைப்பு இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மைதானத்திற்குரிய கட்டுமானம் இல்லை, மைதானம் குன்றும் குழியுமான காணப்படுவதால் மழை காலங்களில் மாணவர்கள் விளையாடுவது மிகவும் சிரமாகவுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றார்கள்.
மழை காலங்களில் இவ் மைதானத்தில் மழைநீர் மற்றும் வெள்ள நீர் தேங்குவதால் சுரியும் செறுமாக படிந்து காணப்படுவதால் விளையாட்டு போட்டி காலங்களில் பெரும் கஸ்டத்தின் மத்தியில் மாணவர்களை கொண்டு விளையாட்டுக்களை நடத்துவதாகவும் பாடசாலையின் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இருந்தபோதும் இப்பாடசாலை விளையாட்டுத்துறையில் மாவட்டம் மற்றும் மாகாணம் வரைக்கும் மாணவர்களின் திறமை பரைசாற்றியுள்ள வரலாறுகள் அதிகமாக காணப்படுகின்ற வேளையில் எதிகாலத்தில் குறித்த மைதானம் புனரமைக்கப்படும் பட்சத்தில் மாணவர்களின் வெற்றிகளை பண்மடங்காக அதிகரிக்கலாமென பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றனர். இதற்காக எமது வெளிநாட்டு உறவுகளும் முன்வரும் பட்சத்தில் குறித்த நல்லதொரு காரியத்தை எமது பிரதேச மாணவர்களுக்காக பெற்றக்கொடுக்கமுடியும்.
சின்னச் சிறிய மாணவர்கள் தொடக்கம் உயர்தர மாணவர்கள் வரை தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிக்கொண்டுவரும் வேளையில் பற்றைக் காடுகளும் புல்லும் புதருமாக விளையாட்டுக்குரிய மைதானம் காணப்பட்டால் எவ்வாறு சாத்தியப்படு!
இப்பாடசாலையின் மைதான புனரமைப்புக்குரிய உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில்; எடுத்தக்கொள்ளும் பட்சத்தில் விரைவில் குறித்த மைதானம் புனரமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.












