கிழக்கு மாகாணத்தில் மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. எனவே, மக்கள் ஆணைக்கு முரணாக அமைக்கப்பட்ட ஆட்சியை இரண்டு வாரங்களுக்குக் கூடத் தொடரவிட மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான தயாகமகே சவால் விடுத்தார்.
மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்ட போது மௌனியாக இருந்து கொண்டு மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய சுகபோகங்களை அனுபவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வாக்களித்தோருடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பது துரோகத்தனமான ஒரு செயற்பாடாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இறுதிநேரம் வரை ஆதரவளிக்காமல் இருந்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்கத்
தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்த பின்னரே தாம் மைத்திரிபால
சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது.
அதற்கு முன்னர் அவர்கள் பல்வேறு திட்டங்களுடன் இருந்தார்கள். அதாவது, முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே அந்த வாக்குகளை மைத்திரிக்கு செல்லவிடாமல் தடுக்கும் வகையில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி அந்த வாக்குகளை திசை திருப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முஸ்லிம் மக்கள் மைத்தரிபால சிறிசேனவிற்கு வாக்களிப்பதில் உறுதியாக இருந்தமையினலேயே முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த முறையும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பி வாக்குகளை பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தேசிய பட்டியலில் உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டு கடைசியில் மஹிந்த ராஜபக் ஷ ஆதரித்தார். இவ்வாறான துரோக செயலினை அவர் மீண்டும் புரிந்துள்ளார். இதனால் முஸ்லிம் மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் போன்ற பகுதிகளில் உள்ள மக்களது காணிகளை அபகரித்து விரட்டியடித்த போது ரவூப் ஹக்கீம் வாயை மூடிக்கொண்டு தான் இருந்தார். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் நான் அச்சமின்றி முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்தேன்.
300 வருடங்கள் பழைமைவாய்ந்த கருமலையூற்று பள்ளிவாசலை கடற்படையினர் தம்வசமாக்கிய போதும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மௌனமாகத்தான் இருந்தார். அத்தோடு மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டுதான் இருந்தார்.
இவ்வாறு கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களது வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டன. பல பகுதிகளில் மிகுந்த குழப்பகரமான சூழல் ஏற்படுத்தப்பட்டு மக்கள் அச்சமடைய வேண்டிய சூழலை ஏற்படுத்தினார்கள். ஆகையினாலேயே மஹிந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தமிழ், முஸ்லிம் மக்கள் தீவிரமாக இருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வாக்களித்தவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிமைத்துள்ளது
இந்த புதிய அரசாங்கத்தில் பொறுப்புவாய்ந்த அமைச்சு ஒன்றினயும் பெற்றுக்கொண்டுள்ள ரவூப் ஹக்கீமின் இந்த செயற்பாடு மிகவும் மோசமானதாகும். அத்தோடு மக்கள் ஆணைக்கு விரோதமானதாகும். எனவே இந்த ஆட்சியை நாம் தொடர விடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.