அன்றாட ஜீவனோபாயத்திற்காக படுவான்கரையிலிருந்து எழுவான் கரைக்கு விறகுகளை விற்கச் செல்லும் வியாபாரிகள்

(சிவம் )

அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதானது போதுமானதாக இல்லை என விறகு வெட்டி விற்பனை செய்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

அன்றாட ஜீவனோபாயத்திற்காக படுவான்கரையிலிருந்து எழுவான் கரைக்கு விறகுகளை விற்கச் செல்லும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உயிரைப் பணயம் வைத்து பிரயாணத்தை மேற்கொள்கின்றனர்.


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத் தலைவர்களே வலையிறவுப்;பாலம், வவுணதீவு பிரதான வீதிகளில் அவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் விறகுகளை அடுக்கி விற்பனைக்கு கொண்டு செல்வதைக் காண முடிந்தது.

மட்டக்களப்பு சந்தையில் விறகுகளை ரூபாய் 500 முதல் 1000 வரை விற்பனை செய்து வீடு செல்லும்போது உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியச் பொருட்களை வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனர்.