கூத்துப் பெருவிழா – 2015

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS)  நடாத்தும் கூத்துப் பெருவிழா நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வு இன்று (27-03-2015) ஆரம்பமாகிறது.

நொச்சிமுனை சாரதா வீதியில் அமைந்துள்ள EDS விழையாட்டு மைதானத்தில் பி.ப 6.00 மணிக்கு நிகழ்வுகள் நடைபெறும்.

ஓய்வு பெற்ற கிழக்குமாகாண காணி ஆணையாளர் திரு. மு. குருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியான கிழக்கு மாகாணசபையின் சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர்    திரு. கணபதிப்பிள்ளை கருனாகரன் அவர்களுடன் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. T.ரவீந்திரராஜா அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளார்.


அண்ணாவியார் “நோஞ்சிப்போடி” களரியில் நடைபெறும் இந்நிகழ்வில் “ EDS ” மாணவர்களின் “ நல்லதங்காள் ” விசேட கூத்துடன்
(1)    மங்கிக்கட்டு ஸ்டார் கலைக்கழகம் வழங்கும் “ கடோற்கஜன் வதை ”
(2)    பருத்திச்சேனை கலைக்கழகம் வழங்கும் “ கர்ணன் வதை ”
(3)    மண்டபத்தடி மலைமகள் கலாமன்றம் வழங்கும் “ வள்ளியம்மன் ”

                                ஆகிய கூத் துகளும் அரங்கேற்றப்பட உள்ளது.