மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அரச உடமையாக்கப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத பொருட்களின் ஏல விற்பனை


(சிவம் ) அரச உடமையாக்கப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத பொருட்களின் ஏல விற்பனை நேற்று  சனிக்கிழமை (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டு நீதவான் நீதி மன்றில் ஒப்படைக்கப்பட்ட பொருட்களே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டன.


லொறி-01,  துவிச்சக்கர வண்டிகள், சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதற்கு பாவிக்கப்பட்ட மின் வயர்கள், கசிப்புக் காய்ச்சும் உபகரணங்கள், வெற்று மதுசாரப் போத்தல்கள், சீல் வைக்காத நிறுவை உபகரணங்கள் என்பன ஏலத்தில் விடப்பட்டன.
இரும்பு வியாபாரிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு ஏலம் வைத்து பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.

வாவியில் மீன் பிடிப்பதற்குப் பாவிக்கப்பட்ட சட்ட விரோத தங்கூசி வலைகளை எரிக்குமாறு நீதவான் நீதி மன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

நீதவான் நீதிமன்றப் பதிவாளர் ஏ. புவனேந்திரன், உயர் நீதி மன்றப் பதிவாளர் பிரதிநிதி ரி. ஜோசப் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.