விடுதலைப்புலி சந்தேக நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை - மட்டு. மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மூன்று குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் விடு­தலைப் புலிகள் சந்­தேக நபர் ஒருவர் குற்றத்தை
 ஏற்­றுக்­கொண்­டதால் பத்து வரு­டங்­களுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் தண்­டமும் விதித்து மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் இத்­தீர்ப்பினை வழங்­கி­யுள்ளார்.


விடு­த­லைப்­பு­லிகள் சந்­தேக நப­ரான செங்­க­ல­டியைச் சேர்ந்தவர்   மீது மூன்று குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் சட்­டமா அதி­பரால் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருந்­தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டிருந்த மேற்­படி சந்­தேக நபர் மீது (அப்­பொ­ழுது 27 வயது) 2011 மார்ச் மாதம் குறித்த வழக்கு பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்­டது.

கைக்­குண்டு எறிந்து ஜகத், குசு­ம­சிறி எனும் இரு இரா­ணுவ வீரர்­களை கொலை செய்ய எத்­த­னித்­தா­ரென இரு குற்­றச்­சாட்­டுக்­களும் கைக்­குண்டை வைத்­தி­ருந்­தா­ரென மூன்­றா­வது குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­பட்டு சட்­டமா அதி­பரால் மட்டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்­றது.

எனினும் மூன்­றா­வது குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ர­ணையின் போது குற்றச்­சாட்டு தொடர்­பான தர­வுகள் பதி­வுகள் கொண்ட ஆவ­ணங்கள் ஏறாவூர் பொலி­ஸாரால் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

இந்த ஆவ­ணங்­களை பொலிஸ் நிலை­யத்தில் இல்­லை­யெனத் தெரிவிக்கப்பட்­டதால் சந்­தேக நபர் மீதான குற்­றச்­சாட்டுப் பத்­தி­ரத்தைத் திருத்தி மாற்­றி­யமைத்த குற்­றங்­க­ளாக சுமத்­தப்­பட்­டது.

இதன்­படி மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்திரமணி விஸ்­வ­லிங்கம் முன்­னி­லையில் வழக்கு விசா­ரணை நடைபெற்றது.

மேலும் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது சந்­தேக நப­ரான கன­க­சூ­ரியம் லோகேஸ்­வரன் இரா­ணு­வத்­தினர் இரு­வரைக் கொலை செய்ய எத்­த­னித்­தமை தொடர்­பான இரு குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் திருத்­தப்­பட்ட மூன்­றா­வது குற்­றச்­சாட்­டான தீங்கு விளை­விக்கும் ஆயுதம் வைத்­தி­ருந்­தமை (சுடு­ப­டைக்­க­லன்கள் சட்­டத்தின் கீழ்) தொடர்­பான குற்­றச்­சாட்­டையும் ஒப்புக்கொள்­வ­தாக தெரி­வித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் சந்­தேக நபர் ஆறரை வருட கால­மாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­வ­தையும் முன் குற்­ற­மில்­லாமை­யையும் கவ­னத்­திற்­கொண்டு தீர்ப்பு வழங்­கினார்.

இதன்­படி மூன்று குற்­றங்­க­ளுக்கும் ஏக காலத்தில் அனு­ப­விக்­கத்­தக்­கதும் பத்து வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட தலா இரு வருட கடூழியச்சிறையும்
ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டப்பணம் செலுத்தத்தவறினால்தலா ஒரு வருட கடூழியச்சிறை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.