(சிவம் ) தீரச் செயல்கள் செய்து உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 151 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை (21) மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.உயிரிழந்த பொலிசாருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டு குறித்த பொலிசாரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட தினைவுத் தூபியில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த பொலிசாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர்களால் மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு மாகாணத்தில் அதிகமாக 1980 முதல் 1999 வரையான காலப்பகுதியில் 2577 பொலிசார் உயிரிழந்ததோடு 1327 பேர் அங்கவீனமானார்கள் என மட்டக்களப்பு அம்பாரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் வாஹிஷ தெரிவித்தார்.
இதன்போது இந்து, பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாமிய மதகுருமாருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு இறந்த பொலிஸ் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் படிகள் உள்ளிட்ட சலுகைகள் பெறுவதில் உள்ள பிரச்சினைகளும் விசாரிக்ப்பட்டன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜயசிங்க, மட்டக்கனப்பு, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.



















