முன்னாள் ஜனாதிபதியினை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர விமல்வீரவம்ச முயற்சி. ஜனா

மட்டு பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் 27.02.2015 அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியிலே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ கோ.கருணாகரம் அவர்கள் ‘முன்னாள் ஜனாதிபதியினை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு விமல்வீரவம்ச செயற்படுகின்றார்கள் என கருத்து தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்..
இன்று எமது செல்வவங்களையெல்லாம் அழித்த கொடிய ஆட்சியில் இருந்து ஒரு நல்லாட்சி மலர்ந்துள்ளது. அவ்வாறு ஆட்சி புரிந்தவர்கள் இன்று முகவரியற்று இருக்கின்றார்கள். அவர்களை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவர அவர்களுடன் இருந்த பங்காளிக்கட்சிகளான சிறுசிறு கட்சிகள் முயற்சிக்கின்றன.

சென்ற வாரம் நுககோடயிலே ஒரு பிரமாண்டமான கூட்டம் நடைபெற்றிருந்தது. அக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அவர்கள் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வரவில்லை. இதற்கு தலைவராக வாயைத்திறந்தாலே துவேசம் பேசும் விமல்வீரவம்ச அவர்கள் செயற்படுகின்றார்கள்.

தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று கூறினாலோ ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறினாலோ அவர் கூறும் வார்த்தைகள் இந்தியா அமெரிக்கா வெளிநாடு புலம்பெயர் தமிழர்கள் சதி செய்கின்றார்கள் என்று கூறுவார். இன்று அவரது நிலை என்ன  அவரது பிறப்பத்தாட்சிப்பத்திரத்திலே அவருடைய வயதினை ஐந்து வருடங்களாக குறைத்துள்ளார். பொய்யான தகவல்களை கொடுத்து அவரது மனைவிக்கு இரண்டு கடவுச்சீட்டுக்கள் வைத்துள்ளார். இதற்கும் அவர் சதிசெய்கின்றார்கள் என்று கூறுவார்.

இவ்விழாவிலே மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பிர்களும் கலந்து சிறப்பித்தனர்.