கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியில் மகளீர் தினத்தை சிறப்பித்து புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்

(படுவான் பாலகன்) தேசிய மகளீர் தினத்தை சிறப்பித்து கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையினால் பெண்களின் சேமிப்பு பழக்கத்தினை அதிகரிக்கும் நோக்குடன் வருடாந்தம் புதிய புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதற்கமைய இன்று(09) வனிதா வாசனா, மணி பிளானர் போன்ற சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான புத்தகங்களையும் வழங்கும் நிகழ்வு கிளையின் முகாமையாளர் மா.மோகனதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சிங்கர் போன்ற நிறுவனங்களின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான விசேட விலைக்கழிவுக்கான பத்திரம், அன்பளிப்பு பத்திரம் (பகைவ எழரஉhநச) போன்றன வழங்கப்பட்டது. இதன் மூலம் குறித்த வாடிக்கையாளர்கள் அனுகூலங்களை அடையவுள்ளனர்.

சென்ற வருடம் இவ்வாறான திட்டங்களை அறிமுகப்படுத்தியின் மூலம் குறித்த கிளை மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசியத்தில் நான்காம் இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.