மட்டக்களப்பைச் சேர்ந்த ஞானசூரியம் டொமினிக் சர்வதேச டெனிஸ் சம்மேளனத்தின் உயர்தர டெனிஸ் பயிற்றுவிப்பாளராக சித்தி.


மட்டக்களப்பைச் சேர்ந்த டெனிஸ் பயிற்றுவிப்பாளர் ஞானசூரியம் டொமினிக் போல் அவர்கள், கடந்த மாதம் சர்வதேச டெனிஸ் சம்மேளனத்தினால் நடார்த்தப்பட்ட உயர்தர டெனிஸ் பயிற்றுவிப்பாளர்களுக்கான தேர்வில் சித்தியடைந்துள்ளார்.

சர்வதேச டெனிஸ் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உயர்தர டெனிஸ்  பயிற்றுவிப்பாளர்களுக்கான இப் பரீட்சை இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் தலைமையதக்த்தில் கடந்த மாதம் இடம்பெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த டெனிஸ் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட ஆசிய பிராந்திய நாடுகளையும் சேர்ந்த 20ற்கும் மேற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள்; பங்குபற்றினர்.; இறுதிப் பரீட்சையில் உயர்தரத்திற்கு சித்தி பெற்ற 3 டெனிஸ் பயிற்றுவிப்பாளர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த  டொமினிக் போல் அவர்களும் ஒருவராவார்.

கடந்த 14 வருடங்களாக் முழு நேரத் தொழில்சார் டெனிஸ்  பயிற்றுவிப்பாளராக். கடமையாற்றி வருகின்ற டொமினிக் போல் அவர்கள் குறிப்பாக இலங்கையில் மாத்திரமின்றி இங்கிலாந்திலும் அந்நாட்டு டெனிஸ் சம்மேளனத்தினால் தகுதிபெற்று அங்கும் டெனிஸ் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் கிழக்குப் பிராந்திய டெனிஸ் மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றியதோடு, மட்டக்களப்பு டெனிஸ் விளையாட்டின் அபிவிருத்தி சார்ந்த துறைகளில் முழுமையாக ஈடுபட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தகவல் - வே.ஈஸ்பரன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்