இதனை வைபவரீதியாக கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன்,
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் பிரதேச முகாமையாளர்
செல்வி சிந்துஜா மார்டின், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், இலங்கை
வங்கி காத்தான்குடி முகாமையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதன் போது புதிய பணவைப்புக்கள், கணக்கு புத்தகங்கள் வழங்கல், கடன் வழங்கல்,
நிலையான வைப்புக்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல் போன்ற சேவைகள் வைபவரீதியாக
வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன்,
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் பிரதேச முகாமையாளர்
செல்வி சிந்துஜா மார்டின், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், பிரதேச
சபை செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி
பெர்னாண்டோ, கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர், பிரதேச அபிவிருத்தி
வங்கி முகாமையாளர், காத்தான்குடி இலங்கை வங்கி முகாமையாளர், பாடசாலைகளின்
அதிபர்கள் , வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர்.












