பட்டிருப்பு கல்வி வலயத்தில் அதிபர்கள் தரம் ஒன்றிற்கு பத்து அதிபர்கள் பதவி உயர்வு

-பழுவூரான்-
கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் 10.03.2015 அன்று நடைபெற்ற அதிபர் சேவையில் பதவி உயர்வு நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் பத்து அதிபர்கள் அதிபர் தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதி கல்வி அமைச்சர் கௌரவ இராதகிருஸ்ணன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

பின்வரும் அதிபர்கள் பதவி உயர்வு பெற்றவர்கள்.
  1. திரு.எஸ்.உதயகுமார் - மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்
  2. திரு.வி.யோகேஸ்வரன் - மட்/தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம்
  3. திரு.ரி.கனகசூரியம் - மட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம்
  4. திரு.எஸ்.வசந்தகுமார் - மட்/களுதாவளை கணேசா வித்தியாலயம் 
  5. திரு.ரி.ஈஸ்வரன் - மட்/துறைநீலாவணை மகா வித்தியாலயம்
  6. திரு.பி.நவரெத்தினராசா - மட்/துறைநீலாவணை மெ.மி.பாடசாலை
  7. திரு .எஸ்.தம்பிராசா - மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை
  8.  திரு.எம்.பஞ்சலிங்கம் - ஓய்வு பெற்ற அதிபர்
  9. திரு.ரி.விவேகானந்தம் -  ஓய்வு பெற்ற அதிபர்
  10. திரு.வி.கனகரெத்தினம் -  ஓய்வு பெற்ற அதிபர்