உள்ளூராட்சி சபைகளின் தற்காலிக தொழிலாளர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் தற்காலிகமாகக் கடமையாற்றிவரும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள்  எதிர்வரும் 30,31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாண நிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மநாதன் தலைமையில் திருகோணமலை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றி வருகின்றவர்களுக்கு இதனடிப்படையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்தோருக்கான நேர்முகப் பரீட்சைகள், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 180 நாட்களுக்கு மேல் பணியாற்றி வரும் 295 பேர், மேற்படி நேர்முகப் பரீட்சைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி நேர்முகப் பரீட்சைகளுக்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 187 பேரும், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றும் 211 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
 .