(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட கோரளைப்பற்று கல்விக்கோட்ட பாடசாலைக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாக்கிழமை (17) சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் கோரளைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி ந.குணலிங்கம் தலைமயில் நடைபெற்றது.
நடைபெற்ற கோட்டமட்ட விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, கௌரவ விருந்தினராக கல்குடா கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) தி.ரவி, எல்.எல்.சி. பணிப்பாளர் வின்சன் பிறான்ஸ் ஜேசுதாஸன், அதன் அங்கத்தவர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள்ää விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கோரளைப்பற்று கோட்டத்திற்கான விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வை வலயக்கல்வி பணிப்பாளர் ஆரம்பித்து வைத்ததும் ஒழுங்கு செய்யப்பட்ட ஒலிம்பித் தீபம் ஏற்றுதல், கொடியேற்றல், மற்றும் அணிநடை மரியாதை போன்ற விளையாட்டுக்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.
நிகழ்வின் இறுதி நிகழ்வில் கோட்டமட்டத்தில் திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.



.jpg)
.jpg)
.jpg)










