(தீரன்)
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓய்வூதியம் பெறுவோரின் வருடாந்த பொதுக் கூட்டம் பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் தாழை செல்வநாயகம் கலந்து கொண்டு நிதியத்தினால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் உதவிகள் பற்றியும் நிதியத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துக் கூறியதை தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளாக தலைவர் ஏ.எம்.அப்துல்காதர் ஜே.பி. செயலாளர் என்.ஆதம்லெப்பை ஜே.பி.பொருளாளராக எம்.ரி.அகமட்லெப்பை உபதலைவராக எம்.எல்.எம்.கலில் உபசெயலாளராக எம்.ரி.அப்துல்சலாம் ஜே.பி.மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக திருமதி எம்.ஏ.சீனிஉம்மா திருமதி என்.எம்.கபீரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
















