மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சியை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் உத்தியோகத்தர் எஸ்.உதயகுமாரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில் உடலில் காயங்கள் ஏற்படும் போதும் அவயவங்களில் முறிவுகள் ஏற்படும் போதும் சாதாரண மக்களால் அவற்றை கையாளத் தெரிவிதில்லை. அதே போன்று நஞ்சு அருந்திய போதோ அல்லது தொண்டையில் உணவு, நீர் முதலானவை சிக்கும் போதோ அவற்றை எவ்வாறு கையாள்வதென்று படித்தவர்களுக்குக் கூட தெரிவதில்லை. இதனால் உயிரிழப்புக்களோ அல்லது உடற்பாதிப்புக்களோ ஏற்படகின்றன. இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமானால் முதலுதவி அறிவு மக்களிடையே பரப்பப்படல் வேண்டும். முக்கியமாக வேலைத் தளங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வேலைத் தளங்களில் உள்ளோரில் கணிசமானோர் முதலுதவி அறிவு பெற்றோராய் இருத்தல் அவசியம். அந்த வகையிலே மட்டக்களப்பிலே பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அதன் நிர்வாகம் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கி வருவது மிகவும் வரவேற்கத் தக்கதாகும் என்றார்.
இம்முதலுதவிப் பயிற்சியில ச.கணேசலிங்கம் மற்றும் சீ.கஜேந்திரன் ஆகியோர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவரின் வழிகாட்டிலில் பயிற்றுனர்களாக் செயற்பட்டனர்.












