(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட கிரான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இறுதி நாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (19) வித்தியாலயத்தின் அதிபர் சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
கிரான் மகா வித்தியாலயத்தின் இறுதி நாளாக இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) தினகரன் ரவி. சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம், உடற்கல்விப் பணிப்பாளர் எஸ்சுபாஸ்சந்திரன், உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.ரமேஸ். அழைப்பு அதிதிகள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நடைபெற்ற இறுதி நாள் கிழ்வுகளை அலங்கரிக்கும் முகாமாக அதிதிகள் வரவேற்கப்பட்டதும் கொடியேற்றப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றுலுடன் அனைத்து விளையாட்டுக்களும் ஆரம்பமாகியது.
வருடாந்தம் நடைபெறும் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய பெற்றோர்களுக்கான நிகழ்வுää பழைய மாணவர்களுக்கான நிகழ்வுää நடுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகள் நடைபெறும் வேளையில் இப்பாடசாலையிலும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மாணவர்களின் அணிநடை நிகழ்வு மற்றும் ரில் போன்ற நிகழ்வுகளும் நல்லமுறையில் நடைபெற்றதை அவாதனிக்ககூடியதாக காணப்பட்டது.
விளையாட்டுக்களில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்குரிய வெற்றிக்கேடயங்கள் நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.












