இரு மொழி மானில ஆட்சியே இலங்கைக்கு பொருத்தமானது-கி.துரைராஜசிங்கம்

(தீரன்)
இலங்கைக்கு இந்தியாவை ஒத்த இரு மொழி மானில ஆட்சியே சிறந்ததாக இருக்கும் என கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் இரா.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.


களுவன்கேணி நெடியமடு  அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்றத்திலே உரையாற்றியபோது ஒரு நாட்டிலே இருக்கின்ற எல்லா இனங்களும், எல்லா மதங்களும், எல்லா மொழிகளும் கௌரவிக்கப்பட வேண்டுமெனவும் அரசியல் தலைவர்களுக்கு உறைக்கக்கூடிய வகையில் கூறியுள்ளார்.

அதைவிட ஒரு நாட்டில் சமஸ்டி என்கின்ற கூட்டாட்சி முறை உருவாக்கப்படுகின்ற போதுதான் எல்லோருடைய வளத்தையும் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சமஸ்டி என்கின்ற கூட்டாட்சியையே கூட்டமைப்பு கோரி நிற்கின்றது எனவே எதிர்காலத்தில் சமஸ்டி ஆட்சியை உருவாக்கி இலங்கை திருநாட்டை இந்து சமுத்திரத்தின் முத்தாக மாற்றுவதா அல்லது இந்து சமூத்திரத்தின் கண்ணீர் சிந்தும் நாடாக மாற்றுவதும் சிங்களத் தலைவர்களின் கைகளிலேயே உள்ளது.

என்னை பொறுத்தமட்டில் இந்தியா எமக்கு பக்கத்திலே உள்ள நாடு அந்த நாட்டில் உள்ளதைபோன்ற இரு மொழி மானில சமஸ்டி ஆட்சியே இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கும் சிங்கள மொழி மானிலமும், தமிழ் மொழி மானிலமுமே இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு சிறந்ததாக இருக்கும் என்றார்.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி ,கால்நடை உற்பத்தியும் அபிவிருத்தியும், மீன்பிடித்துறை, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், ஊளியர் ஆணைக்குழு போன்றவற்றுக்கான அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம், அவர்களும்   கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபையின் உதவி தவிசாளர் இ.பிரச்சனா , கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் தி.ரவி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஏறாவூர்பற்று-02 கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு, அவர்களும் விசேட அதிதியாக ஓய்வுபெற்ற அதிபர் வீ.மாணிக்கவேல், அவர்களும் அழைப்பு அதிதிகளாக களுவன்கேணி-01 கிராமசேவையாளர்  திரு.கே.ராஜ்குமார் , ஆயுள்வேத வைத்தியர் இ.ரமேஸ்குமார், களுவன்கேணி காளிகோயில் பிரதம பூசகர், வீ.நவரெட்ணம் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் வீ.பரமதேவா பாடசாலை அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.கலா தேவராஜா, சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.பூ.யோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.