மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இலங்கை மின்சாரசபையின் நடமாடும் சேவை மண்முனை மேற்கு பிரதேசசெயலகத்தில் நேற்று (19) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் ஏற்பாட்டில் பிரதேச மின் பொறியியலாளர் எஸ்.அனிதா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை மின்சாரசபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் ரி.தவனேஸ்வரன், அபிவிருத்தி மின் பொறியியலாளர் டி.கௌதமன் மற்றும் மின்சாரசபை அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.
மின்சாரசபையின் இந் நடமாடும் சேவை இப் பிரதேசத்தில் முதலாவது தடவையாக நடாத்தப்பட்டது. இதில் மின்சாரம் பெறல், மின்மாணி பிரச்சனைகள், பணம் அறவீடு தொடர்பான விளக்கங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இச் சேவையில் இடம்பெற்றது.
இச் சேவையில் சுமார் 150 பேருக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சேவையினைப்பெற்றுக்கொண்டனர்.
இப் பிரதேச மக்களுக்கு இந் நடமாடும் சேவை பயனுள்ளதாக அமைந்திருந்ததனை காணக்கூடியதாக இருந்தது.












