(சித்தாண்டி நித்தி) இவ் ஆண்டில் கல்குடா கல்வி வலயத்திலிருந்து பதினொரு அதிபர்கள் இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பதவி உயர்வை பெற்றுள்ளனர்.
இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்ற அதிபர்களுக்கு பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 10.03.2015 திகதி கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கää கல்வியமைச்சின் மேலதிக செயலாளர், றோயல் கல்லூரி அதிபர் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்ற ஏறாவூர் பற்று-2 கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களான கு.சண்முகம் மட்/களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம், எஸ்.மோகன் மட்/வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயம், தா.சித்திரவேல் மட்/பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலயம், கி.யோகநாதன் மட்/மாவடிவெம்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம், சோ.லெட்சுமணன் மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம், சா.கமலநாதன் மட்/குமாரவேலியார் கிராமம் விக்கினேஸ்வரா வித்தியாலயம், கே.கமலகுமாரி மட்/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயம் என மொத்தமாக 7 அதிபர்களும் மற்றும்
கோறளைப்பற்றுக் கோட்டத்திலுள்ள எம்.தவராசா மட்/சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம், ரி.இதயராசா மட்/கிண்ணயடி சரஸ்வதி வித்தியாலயம், என். குணலிங்கம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கோறளைப் பற்று, ரி.சந்திரலிங்கம் மட்/பேத்தாளை விக்கினேஸ்வரா வித்தியாலயம் என மொத்தமாக 4 அதிபர்களும் அடங்குகின்றனர்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களினால் பதவி உயர்வுக் கடிதங்களை பதவி உயர்வு பெற்ற அதிபர்களுக்கு வழங்கிவைத்தார்.
கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் தகுதியானவர்களுக்கே பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













