(தீரன்)
மட்டக்களப்பு ஓட்டமாவடி அல்மஜிமா கிழக்கு பள்ளிவாயல் நிர்வாத்தினரினால் வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஓட்டமாவடி அல்மஜிமா கிழக்கு பள்ளிவாயல் நிர்வாத்தினரினால் நேற்று சனிக்கிழமை (14) மாலை நடைபெற்ற இன் நிகழ்வில் வறிய நிலையில் கல்வி கற்கும் அறபா நகரிலிருந்து நாள்தோறும் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை கால் நடையாக நடந்து சென்று க.பொ.த.உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் நலன் கருதியே இவ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அல்மஜிமா கிழக்கு கிராமத்து தலைவர் ஜ.எல்.எம். முஸ்;தபா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மேற்கு அல்மஜிமா பள்ளிவாயல் தலைவர் எவ்.ரபீக் முள்ளிவட்டவான் விவசாய சங்கத் தலைவர் எம்.ரம்ளார் மற்றும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இவ் மாணவிகளின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு இச் செயற்பாடு மேலும் பங்களிப்பாக இருக்கும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் பள்ளிவாயல் நிர்வாத்தினருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4















