"வேரேன்டினா" நிறுவனத்தினால் பாடசாலை தளபாடங்கள் திருத்தி வழங்கப்பட்டது

(குளத்தூர் ரவி) 
மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தின்  நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் வேரேன்டினா(verendina)  நிறுவனத்தின் அனுசரணையில் திருத்தப்பட்ட தளபாடங்களை மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் த.கோபாலபிள்ளை அவர்கள் தலைமையில் வித்தியாலய வளாகத்தில் இன்று இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக மண்முணை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களும் வேரேன்டினா (verendina) நிறுவனத்தின் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது 110 (A,B ரக) மேசைகளும் மற்றும் 90 (A ரக) கதிரைகளும் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரினால் சம்பிரதாயபூர்வமாக வித்தியாலய அதிபரிடம் கையளிக்கப்பட்டது.