எப்.ஏ கிண்ணப் போட்டியில் மட்டுநகர் யங்ஸ்டார், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி; அணிகள் அடுத்த போட்டிக்குத் தகுதி



(கௌரீசன்) இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தினால் கார்ல்கில்ஸ் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் எப்.ஏ கிண்ணத்திற்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் மட்டக்களப்பு மாவட்ட அணிகள் பங்குபற்றும் இரண்டாங் கட்டப் போட்டிகளின் இரு போட்டிகள் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் நேற்றும் (12) இன்றும்(13) பிற்பகல் வேளைகளில் இடம்பெற்றன.

இவ்விரு போட்டிகளிலும் பங்குபற்றிய மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏறாவூர் வை.எஸ்.எஸ.சி அணியும், மட்டக்களப்பு யங்ஸ்டார் அணியும் வெற்றி பெற்று மூன்றாங் கட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.

நேற்றைய தினம் மட்டுநகர் கதிரொளி அணியை எதிர்த்து போட்டியிட்ட ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினர் 4:1 எனும் பேறினால் வெற்றி பெற்றார்கள்.

இன்று ஓட்டமாவடி யங்சோல்யஸ் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட மட்டுநகர் யங்ஸ்டார் அணியினர் 12:0 எனும் பேறினால் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.