பட்டிருப்பு கல்வி வலயத்தில் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பம். திருத்தியது

(பழுவூரான்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பெரு விளையாட்டுக்கள் நேற்று 03.03.2015 மட்/பழுகாமம் கண்டுமணி ம.வித்தியாலய மைதானத்திலும் மட்/களுதாவளை ம.வி. மைதானத்திலும் ஆரம்பமானது.

முதலாவதாக 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான  கபடிப் போட்டியும் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான எல்லேயும் இடம்பெற்றது. 
இதில் பழுகாமம் கண்டுமணி ம.வி. கபடிப்போட்டியில் முதலாவது இடத்தினையும் மட்/குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இரண்டாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

எல்லே போட்டியில்  மண்டூர் 14 அ.த.க. பாடசாலை முதலாவது இடத்தினையும் மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலயம் இரண்டாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.