ஏழு கலைக்குழுக்கள் பங்குபற்றும் இப்பெருவிழாவின் இறுதி நிகழ்வில் MR. Chirsty Doran ( Professor University of Applied Science and Arts, Lucerne Swiss ) அவர்களுடன் MRS. Mariane Doran ( Head of the University of Applied Science and Arts, Lucerne Swiss and President of The Swiss Musicians Union ) பிரதம அதிதிகளாகவும் DR.R.ஞானசேகரன் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். முதல் இரு நாள் நிகழ்ச்சிகள் EDS விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
27-03-2015 “நோஞ்சிப்போடியார் களரி”
தலைமை
- திரு. கதிர்காமத்தம்பி குருநாதன் (ஓய்வுநிலை கிழக்கு மாகாண காணி ஆணையாளர்)
- திரு. கணபதிப்பிள்ளை கருணாகரன் (கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர்)
1. மங்கிக்கட்டு ஸ்டார் இளைஞர் கழகம் வழங்கும் “கடோர்கஜன்”
2. மண்டபத்தடி மலைமகள் கலாமன்றம் வழங்கும் “வள்ளியம்மன்”
3. பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகம் வழங்கும் “கர்ணன் வதை”
4. முதலைக்குடா பத்திரகாளியம்மன் கலைக்கழகம் வழங்கும் “கடோர்கஜன் வதை”
ஆகிய கூத்துக்களுடன்
28-03-2015 “சீனித்தம்பி களரி”
தலைமை
- திரு. தங்கராஜா மலர்ச்செல்வன் (மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார இணைப்பாளர்)
பிரதம அதிதி
- திருமதி. திலகவதி ஹரிதாஸ் (அதிபர் சு.மு.ஆ பெண்கள் மகா வித்தியாலயம்)
1. மட்டக்களப்பு கலைக்கோட்டன் கலைக்கழகம் வழங்கும் “உத்தரை புலம்பல்”
2. முனைக்காடு இளைஞர் மன்றம் வழங்கும் “நல்லதங்காள்”
3. ஆரையம்பதி ஆரைêர் கலாமன்றம் வழங்கும் “சுபத்திரை கல்யாணம்”
ஆகிய கூத்துக்கள் ஆற்றகை செய்யப்படும். இவற்றுள் தெரிவு செய்யப்படும் மூன்று கூத்துக்கள் இறுதிநாள் நிகழ்வில் மீண்டும் அரங்கேற்றப்படும்.
இறுதிநாள் நிகழ்வு உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட “குமாரவேலி அண்ணாவியார்” களரியில் நடைபெறும். கூத்துப்பெருவிழா நிகழ்வின் ஒரு அங்கமாக பிறவிக் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் கலைக்காற்றிய சேவைக்காக கௌரவப்படுத்தப்படுவதும் முக்கிய விடயம் என ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் மா. செல்வராஜா தெரிவித்தார்.












