கட்டாரின் அரச தலைவர் தமீம் பின் அஹமட் அல் தானி நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளை பிற்பகல் இலங்கைக்கு வருகைதரும் கட்டார் அரச தலைவர் சுமார் நான்கு மணித்தியாலங்கள் தங்கியிருப்பார் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
கட்டார் அரச தலைவரின் வருகையை முன்னிட்டு நாளை பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.