மட்டுநகரில் F.A கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள்



(கௌரீசன்) இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் கழகங்களுக்கிடையிலான  F.A கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகள் மட்டுநகரில் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய தினம் மாலை வேளையில் புனித இக்னேசியஸ் கழகத்தின் அணிக்கும் ரெட்ணம் கழகத்தின் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் 6:2 எனும் பேறுகளினால் புனித இக்னேசியஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நாளைய தினம் (ஞாயிறு)

காலை 7:30 மணிக்கு கோல்ட் பிஸ் அணியை எதிர்த்து சண்பிளவர் அணியும்,

மு.ப 9:00 மணிக்கு விபுலானந்தா அணியை எதிர்த்து யங்சோல்யஸ் அணியும்,

மு.ப 11:00 மணிக்கு கோப்றா அணியை எதிர்த்து நியு கிறீன் லைட் அணியும்,

பி.ப 01:00 மணிக்கு யங்ஸ்டார் அணியை எதிர்த்து ஜீவஒளி அணியும்,

பி.ப 03:00 மணிக்கு கடல்மீன்கள் அணியை எதிர்த்து டிஸ்கோ அணியும் 
மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.