மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த சமோசாவை விற்பனை செய்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர், ஞாயிற்றுக்கிழமை (29) செய்யப்பட்டதுடன் குறித்த சிற்றுண்டிச்சாலை சுகாதார அதிகாரிகளினால் சீல்வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பிரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.
குறித்த சிற்றுண்டிச்சாலையில் சமோசாவைச் சாப்பிட்ட பாடசாலை மாணவி சுகவீனமுற்றதையடுத்து மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிறுவர் வைத்திய நிபுணரான மேற்படி மாணவியின் தாய் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளார்.
சிற்றுண்டிச்சாலையை சுகாதார அதிகாரிகள் முற்றுகையிட்டபோது பல நாட்களுக்கு முன்பு தயாரித்த பழுதடைந்த மனித பாவனைக்குதவாத சமோசாக்கள் கைப்பற்றப்பட்டன. சிற்றுண்டிச்சாலை உரிமையாளரான சந்தேக நபரை, மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில், திங்கட்கிழமை (30) ஆஜர் செய்யப்பட்டபோது ரூபாய் 50,000 சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.