மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி

(குளத்தூர் ரவி, ஸ்ரீ ஹரன் )
மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தின் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இல்லங்களுக்கு இடையிலான உடல் நலத்திறனாய்வு ​போட்டி இன்று(14) வித்தியாலய அதிபர் வே. மகேசரெத்தினம் அவர்கள் தலைமையில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.


இதில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க. சத்தியநாதன், விசேட அதிதியாக மட்டக்களப்பு மேற்குப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. ஹரிகரராஜ், கௌரவ அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ந.தயாசீலன், எஸ்.முருகேசபிள்ளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி   ஜி. அபேரெத்தின மற்றும் கொக்கட்டிச்சோலை இலங்கை வங்கி முகாமையாளர் ஞா. அரவிந்தன்  இப் பாடசாலையின் PSI இணைப்பாளர் கே. ஶ்ரீ சாயிசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.