நுண்கடன் நிறுவனங்கலும் மீளச் செலுத்த முடியாமல் திண்டாடும் மக்களும்

உலகிலேபொருளாதாரமுன்னேற்றதிதிற்கும், தனிநபரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்வதில் கடன்,நுண்கடன் திட்டங்கள் பாரியபங்களிப்பினைச் செய்துவருகின்றன.  இருந்த போதிலும் எமது பிரதேசங்களில் பல்வேறுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நுண்கடன் திட்டமானது மூலகாரணமாக அமைந்துள்ளமையினையாராலும் மறுக்கவும் முடியாது.


கடன் வழங்கும் நிறுவனங்கள் சார்ந்ததாகவும், கடன்களைப் பெற்றுக்கொள்பவர்கள் சார்ந்துமேபிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே இரு தரப்பினருமே சமூகப் பிரச்சினைகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளனர்.
கடன் என்பது ஒரு தொழில் முயற்சியைத் தொடங்குவதற்குஅல்லது தாங்கள் செய்து கொண்டிருக்கின்ற தொழிலினை விரிவுபடுத்த உதவுவதாக இருக்கவேண்டுமே தவிர ஒருநபரின் வீழ்ச்சிக்குகாரணமாக அமைந்துவிடக் கூடாது. அன்றாட செலவுக்காக அல்லது ஆடம்பரவாழ்க்கைக்காக கடனைப் பெற்றுக்கொள்வதென்பது அபத்தமானது. கடன் உதவியினைப்  பெற்றுக்கொள்கின்றமக்களும் திட்டமிட்டவகையில் தங்களதுதொழில் முயற்சிகளுக்குபயன்படுத்துவதன் மூலமாக பெற்றுக்கொண்ட பணத்தினையும் மீளச் செலுத்தமுடியும்.


அண்மைக்காலமாக நுண்கடன்களை வழங்குகின்ற நிறுவனங்கள் கிராமப்புறங்களுக்கு வீடு வீடாகச் சென்று எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கடன்களை வழங்கி வருகின்றன.  இத்திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பணத்தினை வாரத்திற்கு ஒருமுறைமீளச் செலுத்தவேண்டும் என்பது விதிமுறையாகவுள்ளது.  இதனைப் பெற்றுக் கொள்கின்றமக்களும் தங்களுக்கு கடன்களைப் பெற்றுக்கொள்ளவேண்டியதேவை இருக்கின்றதா? இல்லையா? சிந்திக்காமலேயேபணத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் இப்பணத்தினை வாரத்திற்கு ஒரு முறை செலுத்த முடியாது அவதியுற்றுத் திரியும் பெண்களையும் எம்மத்தியில் காணமுடிகின்றது.

இவ்வாறு சிறியளவான கடன்களைப் பெற்றுவிட்டு அவற்றினை மீளச் செலுத்த முடியாமல் திண்டாடுவதும்,கடனைச் செலுத்துவதற்கென்று மற்றுமொரு நிறுவனத்திடம் கடன் பெறுதல் அல்லது நகையினை அடகுவைத்துப் பணம் செலுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு இறுதியில் குடும்ப,சமூகப் பிரச்சினைகளுக்குமுகங்கொடுக்க முடியாமல் தற்கொலைசெய்து கொள்கின்றநிலமைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் பெண்களைமையமாகக் கொண்டே அமைந்துள்ளது.

நுண்கடன்கள் மக்களின் பொருளாதாரத்தினை அதிகரிக்கவும், கடனாளிகளின் பாதகமான விளைவுகளைக் குறைக்கவும் மக்களுக்குஉதவியாக இருக்கவேண்டும். மாறாகமக்களுக்குச் சுமையாகப் பாதகத் தன்மையினைஅதிகரிக்கத் துணைபுரிவதாகஅமைந்துவிடக் கூடாது. எனவே நுண்கடன் களைவழங்கும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். கடன் உதவியைப் பெற்றுக்கொள்ள வருகின்ற நபர் குறிப்பிடுகின்ற காரணம் சரியானதா? அந் நபருக்கு கடனுதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளதா? போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு உண்மை நிலையினை அறிந்துகடன் உதவியினை வழங்குதல் வேண்டும். இதே போன்று கடனைப் பெற்றுக்கொள்பவர்களும் தங்கள் தேவையறிந்து செயற்படுதல் அவசியமானதாகும்.

தங்களுக்குத் தேவையென நினைக்கும் தொழிலினைஆரம்பிப்பதற்காக அல்லது தொழில் முயற்சியை அதிகரிப்பதற்காக மாத்திரமே கடனைப் பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர ஆடம்பரவாழ்க்கைக்காக கடன் பெறுவதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.

குறிப்பாகச் சொல்லப் போனால் கடனைப் பெற்றுக்கொள்ளவிரும்புகின்ற மக்கள் அது சார்ந்த விடயங்கள், நிபந்தனைகளைத் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதுமில்லை, தெரிந்துகொள்வதற்கு முயற்சிப்பதுமில்லை. இது போன்றே கடனை வழங்கும் அதிகாரிகளும் இவ்வாறான விடயங்களை முழுமையாகத் தெரியப்படுத்துவதுமில்லை. எனவே இவை பற்றிய விடயங்களில் விழிப்புடன் இருக்கவேண்டியதுமக்களின் பொறுப்பாகும்.
கிழமைக்கடன் என்று சொல்லப்படுகின்ற பெற்றுக்கொண்ட பணத்தினை வாராவாரம் மீள் செலுத்துகின்ற திட்டமுறையினாலேயே அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர்.  இத்திட்டம் பெண்களைமையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது. குறிப்பிட்டஎண்ணிக்கையினைக் கொண்டகுழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் கடன் தொகையினை வழங்குகின்றனர். ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒவ்வொரு தலைவி இருப்பார். குழுத்தலைவியே தனது குழு அங்கத்தவர்கள் மீள் செலுத்தவேண்டிய பணத்திற்குப் பொறுப்பாகவும் இருப்பார்.

தனதுகுழுவிலுள்ள ஒருவர் குறிப்பிட்ட தினத்தில் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் குழு அங்கத்தவர்களே பொறுப்பேற்றல் வேண்டும். அத்துடன் குறிப்பிட்டதொகையினை குழுவின் ஏனைய அங்கத்தவர்களிடம் இருந்துஅறவிடப்படும். அத்துடன் கடனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் வீட்டுக்குள் நுளைந்துவீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது என்கின்ற அதிகாரிகளின் வாக்குமூலங்களும் சிலபிரதேசங்களில் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலமைகளினாலேயே பாரதூரமான பிரச்சினைகள் உருவாவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.
நுண்கடன் பற்றியசாதக, பாதகவிடயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்திமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலும்  நுண்கடன் திட்டம் பற்றிய விழிப்புணர்வினைமக்களுக்கு வழங்கும் நோக்குடன் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மூன்றாவதுகண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுநண்பர்களினால் வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டுவருகின்றது.

இந் நாடகமானது மட்டக்களப்புமாவட்டத்தின் 14 பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ளகுறிப்பிட்ட இடங்களில் நிகழ்த்தப்பட்டுநுண்கடன் தொடர்பானகலந்துரையாடல்களும் இடம்பெற்றுவருகின்றன. இவ்வுரையாடல்களின் மூலமாகநுண்கடன் திட்டம் தொடர்பானசாதக,பாதகங்களினையும், இது குடும்பத்தில்,சமூகத்தில் எவ்வாறான தாக்கங்களினை ஏற்படுத்தி வருகின்றன என்பதனையும் மக்களின் அனுபவங்கள்,கருத்துக்கள்,கிராமங்களில் நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் மூலமாகதெரிந்து கொள்ளமுடிந்தது.

 எனவேமக்கள் நுண்கடன் திட்டம் பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும். நிறுவனங்களினால்  வழங்கப்படுகின்ற கடன் திட்டமானது மக்களுக்கு உதவியாக இருக்கவேண்டுமே தவிரமக்களின்  வாழ்க்கைக்குச் சுமையாகமாறிவிடக் கூடாதுஎன்பதனைக் கருத்திற் கொண்டுபொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது ஒவ்வொரு நிறுவனங்களினதும், அதிகாரிகளினதும்  கட்டாயமாகும்.

- துலக்ஸனா