ஜனாதிபதி
மைத்திரிபால அவர்களின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு
கிடைத்தது என்ன? என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
அவர்கள் கேள்வியெழுப்பினார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர்
40 அ.த.க. பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியிலே கலந்து கொண்டு உரையாற்றும் போது
இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்.........
நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தமை
அவர்மேல் கொண்ட விருப்பின் காரணமாக அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேல் கொண்ட
வெறுப்பின் காரணமாகவே நாம் வாக்களித்தோம்.
அனைவரும்
ஆட்சி மாறியிருக்கின்றது என்பதையே பேசிகொள்கின்றார்கள். வடக்கு கிழக்கு மக்களாகிய நாங்கள்
அனைவரும் மைத்திபாலவிற்கு வாக்களித்திருந்தோம். அவர்கள் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பும்
உறுதுணைணயாக இருந்ததன் காரணமாக நாங்கள் சில விடயங்களை செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.
ஆனால் இந்த ஆட்சி மாற்றம் வந்து நாளையுடன் இரண்டு மாதங்கள் முடிவடைகின்றது. இன்னும்
எஞ்சியிருப்பது நாற்பது நாட்கள் மாத்திரம். ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 நாள்
வேலைத்திட்டத்தினை முன்வைத்திருந்தார். இந்த 100 நாட்களில் 60 நாட்கள் கடந்து விட்டன.
40 நாட்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இந்த 60 நாட்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கு
என்ன செய்திருக்கின்றார்கள் என்று கேட்டால் ஒன்றுமே இல்லை என்பது விடையாக வரும். நாம்
கேட்டுக்கொண்டதற்கிணங்க இவர்களால் செய்த வேலைகள்
என்னவென்றால் வடக்கு கிழக்கு ஆளுனர்களை மாற்றியிருக்கின்றார்கள். வடக்கு முதலமைச்சின்
செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார். அதைவிட எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தமிழ் தேசிய
கூட்டமைப்பு உறுப்பினர்கள் விளையாட்டு விழாக்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர எந்த வேலைகளும் செய்யப்படவில்லை.
இதைவிட
நாங்கள் பல கோரிக்கைகள் முன்வைத்திருக்கின்றோம். அதில் சின்ன விடயமாகவுள்ள போராட்ட
காலங்களில் வடக்கு கிழக்கில் கைதுசெய்யப்பட்ட
500 சிறைக்கைதிகளில் ஒருவரையேனும் இதுவரை விடுதலை செய்யவில்லை இது ஒரு வேதனைக்குரிய
விடயமாகும். மாறாக தமிழ்ப்பகுதிகளிலே இருந்து வெளிநாடு செல்கின்ற இளைஞர்களை கட்டுநாயக்க
விமான நிலையத்திலே கைது செய்கின்ற நிலை தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த அரசாங்க
எவ்வாறு கைது செய்து கொடுமைப்படுத்தி அடைத்து வைத்தார்களே அதுவும் தொடர்ந்த வண்ணம்
உள்ளது.
பலபேருக்கு
எதிராக ஊழல் குற்றாச்சாட்டுகளில் முன்வைத்திருந்த போதும் எவரேனும் விசாரணை செய்து தண்டிக்கப்படவில்லை.
என்று கூறினார்.













