மக்கள் வங்கியின் ஊழியர் சங்கத்தின் பொதுத்தேர்தல் - 2015

மக்கள் வங்கியின் ஊழியர் சங்கத்தின் பொதுதேர்தல் 02.04.2015ம் திகதி அகில இலங்கை ரீதியாக நடைபெற்றது.

இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அகில இலங்கை ரீதியிலும் “பிரகதி அணி” அமோக வெற்றி வாகை சூடிக்கொண்டது.

இவ்வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒர் ஆரம்ப பகுதியாக மட்டக்களப்பு மக்கள் வங்கி நகரக்கிளையில் 06.04.2015ம் திகதி அன்று காலை முகாமையாளர் தலைமையில் சக ஊழியர்களும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட ஊழியர் சங்கத்தலைவர் திரு.எஸ்.சர்வேந்திரன், வேட்பாளர் திரு.ஜே.ஆர்.கொஸ்தா, மற்றும் சிரேஸ்ட ஊழியர் சங்க பிரதிநிதிகளும் உதவிபிராந்திய முகாமையாளர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

பலவருடங்களாக ஊழியர் சங்கத்தேர்தலில் வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கும் “பிரகதி” அணியினர் இம் முறையும் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட “ஜனகந்த” அணியினரைப்  தோல்வி அடையச்செய்து தமது தொடர் வெற்றியை உறுதிப்படுத்தி ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.