மட்டக்களப்பு எருவில் கிராமத்தில் வருடாந்தம் நடாத்தப்படும் சித்திரை புத்தாண்டு கலை கலாசார விளையாட்டு விழாவின் 45 வது விழா நாளை 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
18ஆம்,19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இவ் விளையாட்டு விழா எருவில் கண்ணகி விளையாட்டுக் கழகம், எருவில் உதயநிலாக் கலைக் கழகம் மற்றும் எருவில் இளைஞர் கழகம் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இவ் விளையாட்டுவிழாவில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் போன்ற போட்டிகள் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதுடன் இப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
நாளை 18ம் திகதி காலை சைக்கிள் ஓட்டம் எருவில் இருந்து காரைதீவு வரை சென்றுவரல் இடம்பெறும். மறுநாள் 19ம்திகதி காலை மரதன் ஓட்டம் இடம்பெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் 25ம் திகதி இரவுநேர கலை நிகழ்வுகளில் கௌரவிப்பு நிகழ்வுகள், தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்கும் நிகழ்வு, வாழும்போது வாழ்த்துதல் எனும் கௌரவிப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.












