மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் கல்விக் கண்காட்சி - போட்டோ & வீடியோ

(எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியினால் நடாத்தப்படும் நடன, சங்கீத கற்பித்தல் உபகரண கல்விக் கண்காட்சி நேற்று 27ம் திகதி ஆரப்பிக்கப்பட்டு மிக சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சி ஆசிரிய மாணவர்களின் ஆளுமையினை விரித்திசெய்தல் மற்றும் தரம் ஐந்து தொடக்கம் உயர்தரம் வரை கல்விபயிலும் மாணவர்களின் கல்வி கற்றல் ஆளுமை விருத்திசெய்தல் போன்ற விடயங்களை நோக்காகக் கொண்டு இக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் அவர்களும் ஏனைய அதிதிகளாக உப பீடாதிபதிகள், பொறுப்பு விரிவுரையாளர் மற்றும் நிகழ்வின் வழிகாட்டல் ஆலோசகர் திருமதி.பி.அன்ரனி, , விரிவுரையாளர்கள், விரிவுரை இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இக் கண்காட்சியினை எம்மால் நோக்கும்போது நடனப் பாடநெறி மற்றும் சங்கீதப் பாடநெறிகள் போன்றவற்றில்  இக் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் கொண்டுள்ள திறமைகளும் ஈடுபாடுகளும் மிக சிறப்பானதாக காணக்கூடியதாக உள்ளது.

மேலும் இக் கல்லூரியில் சங்கீதம் மற்றும் நடனப் பாடநெறிகளின் தொடர்சியான தேவைப்பாடுகளும் அது விடயமான அபிவிருத்திகளும் மிக அவசியமானதொன்றாக உள்ளது. இக் கல்லூரியின் கலை கலாசாரம் பற்றிய செயற்பாட்டிலும் மாணவர்களின் மனநிலையினையும் நோக்கும்போது இது வௌிப்படுகின்றது.

இக் கல்விக் கண்காட்சியினை  இக் கல்லூரியின் பீடாதிபதிகள்,விரிவுரையாளர்களின் ஆலோசனைக்கமைய முழுமையாக பயிற்சி ஆசிரியர்களினால் ஒழுங்கமைத்து செயற்படுத்தப்பட்டதாக கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.