மட்டக்களப்பில் களை கட்டும் சித்திரை புத்தாண்டு வியாபாரம்

(சிவம்)

புதிய அரசின் மாற்றத்தினால் மக்களிடையே புத்துணர்ச்சி, புதுவாழ்வு மற்றும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்போடு மலரவிருக்கும் மன்மத சிங்கள தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மட்டக்களப்பு நகரில் இன்று  திங்கட்கிழமை (13)  அதிக சனக் கூட்டம் காணப்பட்டது.

புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பதற்கேற்ப படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள மக்கள் புது உடுப்புக்கள், புதுப்பானை, அகப்பை , வீட்டுப் பாவனைப் பொருட்கள், மரக்கறிகள் மற்றும் பழங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.

மட்டக்களப்பு நகர் மற்றும்;  மாநகர பொதுச் சந்தைகளில் மற்றும் வீதியோரங்களில் உள்ள கடைகளில் தங்களிற்கு தேலையான பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.