(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐநா அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் செயலகத்தில் சந்திக்துக் கலந்துரையாடியதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐநா அதிகாரிகளுடனான சந்திப்பின்போது முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் உள்ள யுத்தத்தினாலும் இயற்கை இடர்களினாலும் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து நாளாந்த ஜீவனோபாயத்திற்காக கஸ்டப்படும் விதவைகளின் நிலை குறித்து விளக்கியதாகவும் ஐநா வினால் மேற்கொள்ளப்பட உத்தேசித்திருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் விதவைகளின் விடயத்தையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் UNHCR அதிகாரி கொலாம் அப்பாஸ் மற்றும் UNDP அதிகாரி சுபினாய் நந்தி ஆகியோர் தலைமையிலான குழுவினரும் கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் முதலமைச்சரின் செயலாளர், பிரத்தியேகச் செயலாளர் ஆகியோருட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
















