(சுழற்சி நிருபர் ஹுஸைன் )
புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பேச்சியம்மன் கோயிலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் கொல்லப்பட்டு விட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்
கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (வயது 62) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராசா பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்திலேயே முதியவர் மோதுண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வாகத்தின் சாரதியும் எம்பி பயணித்த வாகனமும் காத்தான்குடிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாகன சாரதி குமாரிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.