மட் இந்து மகளிர் மன்றத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இந்து மகளிர் மன்ற மண்டபத்தில் அம்மன்றதின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது
.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கௌரவ அதிதியாக மட் வலயக் கல்விப் பணிப்பாளர் .க.பாஸ்கரன் மட் மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் சிறப்பு அதிதியாக மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்
.
இங்கு வலயப் போட்டிகளில்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதம அதிதிக்கு இந்து மகளிர் மன்றத்தினால் அவரது சமூகசேவையைப் பாராட்டிநினைவு பரிசும் வழங்கப்பட்டது.












