கல்முனை ஆதாரவைத்திய சாலையில் அமைந்திருக்கும் வினாயகப்பெருமானின் உருவம் தாங்கிய வாகன பவனி

(சமி)கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ சித்தி வினாயாகப்பெருமானின் மகாகும்பாவிஷேகம் மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்று வருகின்றது. 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று பிரதிஸ்ரை செய்யப்பட்ட வினாயகப்பெருமானின் உருவம் ஏந்திய வாகன பவனி கல்முனை ஆதார வைத்திய சாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி கல்முனை மட்டக்களப்பு பிரதாக வீதி வழியாக சென்றது.

பாண்டிருப்பு, நீலாவணை ,கல்லாறு ,சேனைக்குடியிருப்பு, காரைதீவு போன்ற இடங்களில் நின்ற  பெருந்திரளான இந்துக்கள் பெருமானை மிகவும் பயபக்கியுடன் பிராத்தித்து மலர் தூவி வணங்கினர். பின்னர் ஆலயத்தை வந்தடைந்த வினாயகப்பெருமானின் வாகனப் பவனியின் பின்னர் அங்குள்ள ஆலத்தில் தொடர்ந்து பூசைகள் கிரிகைகள் நடைபெற்று வருகின்றது .