மட்டக்களப்பு - மண்முனை, உலகநாச்சிபுரம் பேரருள்மிகு பிள்ளையார் ஆலய வருடாந்த மகஹோற்சவத் திருவிழா நிகழ்வுகள்.26.03.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக திருவேட்டைத் திருவிழா , சப்புறத் திருவிழா என்பன இடம்பெற்றதுடன் . 03.04.2015 வெள்ளிக்ழமை தேர்ரோட்டத்திருவிழா அடியார்கள் வடம்பிடித்து வெகு விமர்சையாக நடை பெற்றது.
இத் திருவிழா நாளில் இலங்கை வானொலி தேசியக் கலைஞ்சர் பத்மசிறி அவர்கள் பாடிய பிள்ளையாரின் காவடிப்பாடல் இசைவெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பி,அரியநேத்திரன் அவர்கள் கலந்து கொண்டடு சிறப்பித்தார்.இதில் கொக்கட்டிசசோலை தாந்தோன்றீஸ்பரர் ஆலய குரு சிவஸ்ரீ சோதி குருக்கள் அவர்களும்,இலங்கை வானொலி தேசியக் கலைஞர் பத்மசிறி அவர்களும் கலந்து கொண்டதுடன் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டு இறுவெட்டினை வெளியிட்டு வைத்தனர் .
(சசி)












