கர்ப்பினி தாய்மாருக்கு போஷக்குப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு

( ரவிப்ரியா )        
மண்முனை தென் எருவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கர்ப்பினித் தாய்மார் 574 பேருக்கு அரசின் நூறு நாள் செயற்திட்டத்தின் கீழ் போஷhக்குப்   பொதி வழங்கும் நிகழ்வு. பிரதேச செயலாளர் கலாநிதி
கோபாலரெத்தினத்தினால் எருவில், மாங்காடு கல்லாறு ஆகிய இடங்களில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கபபட்டது. பெரியகல்லாற்றில் கல்லாறு தறைநீலாவணை ப.நோ.கூ.சங்கத்தின் மூலம் போஷhக்குப் பொதிவழங்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வின் ஏற்பாட்டாளரும்,முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி.எஸ்.அருந்ததி, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.புவிதரன், பொதுசுகாதார பரிசோதகர்கள், கூட்டறவுச் சங்கத்தின் தலைவர், உபதலைவர், கூடடுறவு பரிசோதகர், மற்றும், பொதுமுகாமையாளர் க.சிவராஜசிங்கம், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பல முக்கியஸதர்களும் கலந்து கொண்டனர்.