(ரேவநிசாந்) மட்டக்களப்பின் மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் மகிழூர்முனை 110பி கிராமத்தில் மண்டபத்தடியில் கோயில்கொண்டு அடியவர்களின் இடுக்கண் களைந்து இன்னல்களை நீக்கி இஷ்ட சித்திகளை வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 4ம்நாளான 01.04.2015 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு கண்ணகிபுரம் கருணை விநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பித்து மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வேழமுகத்து விநாயகனுக்கு பாலாபிசேக நிகழ்வு சிறப்பாக விசேட பூசைகளுடன் இடம்பெற்றது.
மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 4ம் நாள் திருவிழா நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு













.jpg)











