முறையான இடமாற்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலையிடுவது சரியா

(நேத்திரன்)
மட்டக்களப்பு  மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி  வலயத்தின்   ஓந்தாச்சிமடம்  விநாயகர்  வித்தியாலயத்தில்   12  வருடமாக  தொடர்ச்சியாக  கடமையாற்றும்   ஆசிரியரின்   முறையான  இடமாற்றத்தில்  தமிழ் தேசிய  கூட்டமைப்பு   தலையிடுவது  சரியா   என   ஓந்தாச்சிமடம்   கிராம  மக்கள்   கேள்வி  எழுப்புகின்றனர். இவ்விடயம்  தொடர்பாக   சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்,அரசியல்வாதிகளுக்கு  62  பேரால்  ஒப்பமிட்டு  அனுப்பப்பட்ட கடிதத்திலேயே  குறிப்பிடப்பட்டுள்ளது.



முன்னாள் முதலமைச்சர் (பிள்ளையான்)  அவர்கள்  கல்வி நிர்வாகத்தில்  தலையிடுவது   பிழை  என்று அன்று கூறிய  தற்போதைய  விவசாய  அமைச்சர் திரு.துரைராஜசிங்கம்  அவர்கள்  தற்போது  ஆசிரியர்    இடமாற்றத்தை   இரத்துசெய்யும்படி  தலையிடுவது  சரியா.இது  பாடசாலையின்  எதிர்கால  வளர்ச்சியை  பாதிக்கும்  என  கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் ஆசிரியர் இடமாற்றத்தை  அமுல்படுத்த நியாயமாக  நடந்து கொள்ளுமாறு விவசாய  அமைச்சரிடம்  நாங்கள் வினயமாக  கேட்கிறோம்  எனவும்  கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது  இவ்வாறு   இருக்க   சற்று முன்னர்  மட்டக்களப்பு    இடம்பெற்ற   தமிழ்தேசிய  கூட்டமைப்பின்  கூட்டத்தில்   தமிழ்தேசிய  கூட்டமைப்பின்   பாராளுமன்ற   உறுப்பினர்   பொன்.செல்வராஜா இவ்விடயம்  தொடர்பாக பல   காரசாரமான   கேள்விகளை  தொடுத்ததாகவும்,எனக்கு  அறிவிக்காமல்   இவ்விடயம்  தொடர்பாக  ஓந்தாச்சிமடம்  விநாயகர்  வித்தியாலயத்தில்  நீங்கள் கூட்டம்   நடாத்தியது   பிழை  என கிழக்கு  மாகாண விவசாய   அமைச்சரிடம்  சுட்டிக்காட்டியதாக   தெரியவருகின்றது.